Inspirational Sayings of the Great on Sandhya-Upasana
(VIII)
Sri Sringeri Jagadguru Sankaracharya
Brahmibhuta Sri Abhinava Vidyatirtha Svaminah
(Picked from ஜகதகுரு பதிலளிக்கிறார் (1983)
Brahmibhuta Sri Abhinava Vidyatirtha Svaminah
(Picked from ஜகதகுரு பதிலளிக்கிறார் (1983)
சிஷ்யன்: காயத்ரீ ஜபத்தை மனதாலேயே ஜபிக்கும்போது அம்மந்திரத்தின் ஸ்வரத்தில் கவனமாக இருக்கவேண்டும் என்பது தேவையா?
ஆச்சார்யாள்: உதட்டுகள் அசைத்து ஜபித்தால் ஸ்வரத்தில் கவனம் வைக்க வேண்டும். ஆயினும் மனத்தால் காயத்ரீ மந்த்ரத்தை, ஒருநிலைப்படுத்திச் சொன்னால் ஸ்வரவிஷயத்தில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமலிருக்கலாம். மானஸீகமாகச் செய்கையில் வெறும் மந்திரத்தை ஜபிப்பதே போதுமானது.
சிஷ்யன்: தொலைதூரம் ரயிலில் பயணம் செய்கையில் சந்தியாவந்தனத்தை எப்படி செய்வது? செய்யும் பொது நாம் ஒரே திசையில் போய்க்கொண்டிருக்கமாட்டோமே?
ஆச்சார்யாள்: வண்டி நடு நடுவில் நிற்குமல்லவா?
சிஷ்யன்: நின்றால்?
ஆச்சார்யாள்: நீண்டகாலம் ஒரு ரெயில் நிலையத்தில் வண்டி நின்றால், அங்கு ஸந்தியாவந்தனம் செய்துகொள்ளலாமே?
சிஷ்யன்: இம்மாதிரி பொருத்தமாக நிற்குமிடங்கள் இல்லாவிடில் என்ன செய்வது?
ஆச்சார்யாள்: அச்சூழ்நிலையில் வேறு வழியில்லாததால் மனதாலேயே செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment