Inspirational Sayings of the Great on Sandhya-Upasana
(VI)
Jagadguru Sri Sankaracharya of Kanchi
Brahmibhuta Sri Chandrasekharendra Sarasvati Mahasvaminah
(Picked from வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபை, பிரசுரம், 7 (1947)Brahmibhuta Sri Chandrasekharendra Sarasvati Mahasvaminah
"ஒருவன் ஸைக்கிள் விட்டுக்கொண்டு போகிறான். பெடலை சுற்றுகிறான். ஸைக்கிள் ஓடுகிறது. நன்றாக பழக்கப்பட்டவன் பெடலை வெகு தீவிரமாக காலால் சுற்றுகிறான். பின்பு கொஞ்ச நேரம் பெடலை சுற்றாமலே சும்மா இருந்து விடுகிறான். கைகளால் மாத்திரம் ஸைக்கிளின் பிடியைப் பிடிதுக் கொண்டிருக்கிறான். கால் சும்மாவாகவே இருக்கிறது. ஸைக்கிள் இபோப்து பெடல் செய்யப் படாமல் இருந்தாலும், முன்பு தீவிரமாக சுற்றிய வேகத்தால் வெகு சுகமாக போய்க் கொண்டிருக்கிறது ...
இன்றைக்கு மூன்று தலைமுறைகளுக்கு முன்னிருந்த அந்தணப் பெரியோர்கள் தாங்கள் க்ருதார்த்தர்களாக வேண்டியதற்கு எவ்வளவு பிரம்மதேஜஸ் வேண்டுமோ அதைவிட அதிகமாகவே தம் புனித வழ்க்கை என்னும் "ஸைக்கிளை" தீவிரமாகப் பெடல் செய்துவிட்டார்கள். இன்று நாம் ஒரு அனுஷ்டானமும் செய்யாமல், அவர்கள் பெயரென்னும் கைப்பிடியை மாத்திரம் பிடித்துக் கொண்டிருப்பதால் "பாஸ்" செய்கிறோம்.
அவர்கள் நான்கு மணிக்கு, ப்ராஹ்ம முகூர்த்தத்தில் எழுந்தாற்கள்; நாம் அனேகமாக ஸூர்யன் எழுந்த பின்ன்ரே எழுந்திருக்கிறோம். அவர்கள் காலத்தில், ஸந்த்யாவந்தனம் செய்யாதவனைத் தேடிக் கண்டுபிடிக்க வெண்டும், நம் காலத்தில், செய்பவனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். ...
மூன்று தலைமுறைகளுக்கு முன்பு இருந்தவற்கள் செய்த 'பெடல்' இன்னும் எத்தனை நாளைக்கு ஓடும்? பெடல் செய்யப்படாத ஸைக்கிள் எவ்வளவு தூரம் ஓடும்? இப்பொழுதே மங்கிவிட்டது. ...
ஆதலால், இனி நம் பின் தலைமுறைகள் ஈச்வர அனுகிரகத்திலும் பிரம்மதேஜஸ்ஸிலும், உத்தம மேதையிலும் குறையாமலிருக்க வேண்டு மானால், இனி நம் வழ்வில் வர வர இவ்விஷயங்களில் க்ஷீணமடையாமல் இருக்க வேண்டுமானல், நாமும் தர்மசாஸ்த்ரம் என்னும் 'ஸைக்கிளின்' கர்மானுஷ்டானம் என்னும் சக்கரத்தை ஆசரணத்தால் 'பெடல்' செய்ய வேண்டும்."

धर्मशास्त्रराथारूढाः वेदखड्गधरा द्विजाः ।
लीलार्थमपि यं ब्रूयुः स धर्मः परमः स्मृतः ॥*
-----
*Baudhayana-dharma-sutra, 1.1.1.14
No comments:
Post a Comment