Wednesday, August 21, 2019

Inspirational Sayings of the Great on Sandhya-Upasana 

(IX)

 Jagadguru Sri Sankaracharya of Sringeri
Brahmibhuta Sri Chandrasekhara Bharati Svaminah
(Picked from ஸ்ரீ சங்கர க்ருபா, மலர்  24, இதழ் 7)

"ஒரு சமயத்தில் சுருங்ககிரி ஆச்சார்யாள் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளை தரிசிக்க வந்த ஒரு கூட்டத்தில் இரண்டு சிறுவர்கள் வணங்கியதும் "இன்று காலை ஸந்த்யாவந்தனம் செய்தீர்களா" என்று கேட்டார். ஒருவன்      "ஸந்த்யாவந்தனம் செய்தேன்" என்று சொன்னான். மற்றவனோ "செய்யவில்லை" என்றான். பிறகு ஆச்சார்யாள் முதல் பையனுடைய முகத்தைப் பார்த்து சந்தேகப்பட்டு அவனிடம் "நீ உண்மையாக ஸந்த்யாவந்தனம் செய்தாயா? பொய் சொல்லாதே" என்றார்கள். பைய்யன் ஆசார்யாளிடம் பயந்து "செய்யவில்லை" என்று உண்மையை சொல்லி "இனிமேல் தவறாது செய்கிறேன்" என்று சொன்னான். மற்றவனோ ஸந்த்யாவந்தனம் செய்யாமலேயே செய்தேன் என்று பொய் சொன்னான். இருவருமே ஸந்த்யாவந்தனம் செய்யவில்லை. ஆனால் ஒருவன் உண்மையை சொன்னான். மற்றவனோ பொய் சொன்னான். இவனிடம் ஸந்த்யாவந்தனம் செய்யாத தவறு ஒன்று, பொய் பேசிய தவறு ஒன்று. ஆக இரண்டு தவறுகள் உள்ளன. உண்மையை சொன்ன சிறுவனிடம் ஸந்த்யாவந்தனம் செய்யாத ஒரு தவறு தான். பொய் சொன்ன தவறு இவனிடம் இல்லை. ஆகையால் உண்மை பேசியவனே உயர்ந்தவன் என்று எல்லோருக்கும் தோன்றலாம். 

ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் பொய் பேசிய சிறுவனே உயர்ந்தவன் என்பது நன்றாக தெரிய வரும். அந்த சிறுவன் ஏன் பொய் சொன்னான்? ஸந்த்யாவந்தனம் செய்யாதது தவறு என்று அவனுக்கு தெரிகிறது. இது வெளியில் யாருக்கும் தெரியாக் கூடாது என்று நினைக்கிறான். தவறு செய்ததில் பயமும் வெட்கமும் இருக்கிறது. ஆகையால் இப்பொழுது பொய் சொன்னாலும் இவனை திருத்த முடியும். பயத்தாலும் வெட்கத்தாலும் தானாகவே ஸந்த்யாவந்தனத்தை தவறாமல் செய்ய ஆரம்பித்து விடுவான். இவனுக்கு உபதேசம் செய்தால் பலன் உண்டு. மற்றவனுக்கோ? தான் செய்தது தவறு என்ற எண்ணமே இல்லை. ஆகையால் பயமுமில்லை, வெட்கமுமில்லை. மிகுந்த தைரியமுள்ளது. ஆகையால் இவனை திருத்துவது மிகவும் கடினம் என்று உபதேசித்தார்கள்."

இதிலிருந்து ஸந்த்யாவந்தனம் செய்வது நமது கடமை என்பதையும், கடமையைச் செய்யாமல் விடுவது தவறு என்பதையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.


No comments:

Post a Comment